பிரான்ஸ் நாட்டின் மற்ற பிரசித்தி பெற்ற நகரங்களை இப்பொழுது பார்ப்போம்,
போர்டிக்ஸ்(Bordeaux)
போர்டிக்ஸ், பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. போர்டிக்ஸ் நகரம் ஒயின் உற்பத்திக்கு மிகவும் பெயர் பெற்றது. போர்டிக்ஸ் நகரத்தில் அதிகமான அளவில் திராட்சை தோட்டங்கள் உள்ளன, இவற்றில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஒயின் நல்ல சுவை மற்றும் வாசனை கொண்டது. போர்டிக்ஸ் நகரம், மேலும் இது நல்ல சுற்றுலா தளம் ஆகவும் விளங்குகிறது.
கேன்ஸ் (Cannes)
கேன்ஸ், இந்நகரம் அதன் கடற்கரை சார்ந்த கேளிக்கை விடுதிகளுக்கு
பெயர் பெற்றது மற்றும் ஹாலிவுட் விருதுகள் வழங்கும் நிகழ்வுக்காகவும்
பெயர் பெற்றது.
லியோன் (Lyon)
லியோன் , பிரான்ஸ் நாட்டின் நவீன நாகரிகத்தின் அடையாளமாக அமைந்துள்ளது. லியோன் நகரம் அதன் பிரசித்தி பெற்ற உணவு
விடுதிகள் அமைந்துள்ளது. லியோன் அதன் பட்டு தொழிலுக்காக பெருமை
வாய்ந்தது.
மார்சில் (Marseille)
மார்சில் , பிரெஞ்சு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஒரு
துறைமுக நகரம் ஆகும். இந்நகரம் அதன் அழகிய கட்டிட அமைப்பு மற்றும்
அதன் பழம் பெருமை வாய்ந்த நகர வடிவமைப்புக்ககாகவும் சிறப்பு பெற்று
விளங்குகிறது.
நைஸ் (Nice)
நைஸ், இது பிரெஞ்சு நாட்டின் மகுடத்தில் வைரம் போன்றது. இது ஒரு மிக
அழகிய நகரம். நைஸ் நகரம் சுற்றுலா பயணிகளால் பெரிதும் விரும்பப்படும்
ஒரு இடமாக விளங்குகிறது. அழகிய குறுகிய தெருக்கள், வணிக சந்தைகள்
இதன் சிறப்பு அம்சம் ஆகும்.
செயின்ட் டிரோபெஸ் (Saint Tropez)
செயின்ட் டிரோபெஸ், இந்நகரம் அதன் மிதமான தட்பவெப்பநிலைக்காக
சுற்றுலா பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. இந்நகரம் வெயில் குளியலை அனுபவிக்க விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு
மிகவும் பிடித்த ஒன்று. மேலும் இதன் இரவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மிகவும்பிரசித்தி பெற்றவை.
ஸ்ட்ரஸ்பார்க் (Strasbourg)
ஸ்ட்ரஸ்பார்க், இந்நகரம் பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. இது ஜெர்மனி நாட்டின் எல்லை பிரதேசத்துக்கு
அருகில் அமைந்துள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட
ஸ்ட்ரஸ்பார்க் கதிட்ரல் சர்ச் இந்நகரத்தின் அடையாள சின்னமாக விளங்குகிறது.
தொடரும் ..............
No comments:
Post a Comment