கோவா - கடற்கரை மாநிலம்
கோவா மாநிலம் இந்தியாவின் மிக அழகிய மற்றும் பரப்பளவில் சிறிய மாநிலம் ஆகும். இம்மாநிலம் அரபிக்கடலோரம் மிக அழகாக அமைந்துள்ளது. கோவாவின் தலைநகரம் பனாஜி ஆகும்.
இது மகாராஷ்டிரா மாநிலத்தை எல்லை பகுதியாக கொண்டுள்ளது. கோவா மாநிலம் போர்த்துகீசியர்கள் காலனி பகுதியாக விளங்கியது. எனவே இதன் நகர்புறம் போர்த்துகீசியர் கட்டிடகலையை கொண்டு அமைந்துள்ளது. இந்த நகரம் அதன் அழகிய தேவாலயங்கள், மற்றும் கடற்கரை பகுதிகளுக்காக சுற்றுலா பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. கோவா மாநிலத்தில் இரண்டு மாவட்டங்கள் மட்டுமே உள்ளன.
கோவா இந்தியாவின் மிக சிறந்த சுற்றுலா தளம் ஆகும். கோவாவில் பொதுவாக கொங்கனி மொழி பேசப்படுகிறது.
கோவாவின் பிற முக்கிய நகரங்கள்
- மர்ம கோவா
- ஓல்ட் கோவா
- வாஸ்கோ ட காமா
- மபுசா
கோவா அதன் அழகிய கடற்கரைகளுக்கு பெயர் பெற்றது. சுற்றுலா கோவாவின் முக்கிய அம்சமாக விளங்குகிறது. வாஸ்கோ ட காமா, கோவாவின் மிகப்பெரிய நகரம் ஆகும்.
நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment