ஜெய்பூர்
ஜெய்பூர், ராஜஸ்தான் மாநிலத்தின் தலை நகரம் ஆகும். இதன் மாநில ஆட்சி மொழி ஹிந்தி. ஜெய்பூர் நகரத்தின் பிரசத்தி பெற்ற இடங்களை பற்றி இப்பொழுது பார்ப்போம். இளஞ்சிவப்பு நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்நகரம் சுற்றுலா பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. பழங்காலத்து கோட்டைகள் இந்த நகரத்தின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
ஹவா மஹால்
ஹவா மஹால், மகாராஜா சவாய் பிரதாப் சிங்கினால் 1727ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அரண்மனையின் அனைத்து பகுதிகளிலும் காற்று வருமாறு அமைக்கப்பட்டது இதன் சிறப்பு அம்சம் ஆகும்.
ஆம்பர் கோட்டை
ஆம்பர் கோட்டை, ஜெய்பூர் நகரத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆம்பர் கோட்டை, ஹிந்து மற்றும் முகலாய கட்டிட கலைக்கு ஒரு நல்ல சான்றாக அமைந்துள்ளது. மேலும் இந்த கோட்டையின் உட்புறத்தின் உள்ளே வரையப்பட்டுள்ள ஓவியங்கள் மிகவும் அழகு வாய்ந்தவை.
சிட்டி பேலஸ்
சிட்டி பேலஸ் இது முபாரக் மஹால் மற்றும் சந்திரா மஹால் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் உட்புறத்தில் அழகிய தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஜெய்பூர் நகரத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ஜல் மஹால்
ஜல் மஹால், ஜெய்பூர் நகரிலுள்ள மன் சாகர் ஏரியின் நடுவே மிக அழகாக கட்டப்பட்டுள்ளது. இது மகாராஜா ஜெய் சிங்கினால் கட்டப்பட்டது. இது இந்திய கட்டிட கலையின் சிறப்பை உலகுக்கு வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
தொடரும்...................
No comments:
Post a Comment