Wednesday, 2 June 2010

புனே பழமையும் புதுமையும் ஒருங்கே இணைந்த நகரம்

புனே


File:Shivaji Statue.jpg

புனே நகரம், மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. இது அம்மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். மேலும் இது அம்மாநிலத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நகராகவும் விளங்குகிறது. இந்நகரத்தில் மிக அதிக அளவில் பல்கலைகழகங்கள் அமைந்துள்ளன.

வரலாறு

புனே மிகப்பழமையான வரலாற்று பின்னணி உடையது. புனே நகரம் 1600 ஆண்டு கால பழமை உடையது. பாடலீஸ்வரர் கல்வெட்டு ஆலயம் இதன் பழமைக்கு ஒரு எடுத்துகாட்டு ஆகும்.

புனே நகரம் பல பெருமை வாய்ந்த பல்கலைகழகங்களை கொண்டுள்ளது. புனே நகரம், "கிழக்கின் ஆக்ஸ்போர்ட்" என்று அழைக்கப்படுகிறது. இந்நகரத்தில் இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் மாணவர்கள் வந்து கல்வி பயில்கின்றனர். இங்குள்ள புனே பல்கலைகழகம் நூற்றாண்டு கால பெருமை வாய்ந்தது.

தட்பவெப்பநிலை

புனே மிதமான வெப்பநிலை உடையது, இதனால் பலரால் பெரிதும் விரும்பப்படுகிறது.
கோடை காலங்களில் 35 - 42°C வெப்பநிலை காணப்படுகிறது.
குளிர்காலங்களில் 20 - 24°C வெப்பநிலை காணப்படுகிறது.

புனேயின் அலுவலக மொழியாக மராத்தி உள்ளது, மேலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பரவலாக பேசப்படுகிறது.

புனே நகரத்தின் மிதமான தட்பவெப்பநிலை மற்றும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் அதன் மூலம் கிடைக்கப்பெறும் மனித வளம் இவற்றுக்காக இந்நகரம் IT நிறுவனங்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. மேலும் GENERAL MOTORS, VOLKSWAGEN, FIAT போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி ஆலைகளை இங்கு அமைத்துள்ளன.

புனே நகரின் முக்கியமான இடங்கள்

ஷாநிவார் வாதா

File:Pune ShaniwarWada DelhiGate.jpg File:ShaniwaarWada 4.JPG

ஷாநிவார் வாதா, இது 1736 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. இந்த அழகிய கோட்டையில் ஐந்து நுழைவுவாயில்களும், கோட்டையின் உள்ளே அழகிய பூங்கா மற்றும் நீருற்றுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆகா கான் அரண்மனை

File:AgaKhan Palace.jpg File:Aga Khan Palace.jpg

ஆகா கான் அரண்மனை, 1892 ஆம் வருடம் சர் முஹம்மத் ஷா ஆஹா கான் அவர்களால் கட்டப்பட்டது. இது ஏர்வாடா என்னும் இடத்தில அமைந்துள்ளது, இது புனே நகருக்கு அருகில் அமைந்துள்ளது. இது மகாத்மா காந்தி அவர்களின் நினைவிடம் ஆகவும் உள்ளது.  இந்த அரண்மனையில் காந்தி திரைப்படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

பாடலீஸ்வரர் குகைக்கோயில்

பாடலீஸ்வரர் குகைக்கோயில், 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதில் உள்ள நாகலிங்க வடிவ சிவலிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் இதில் ஒரு நந்தி மண்டபம் அமைந்துள்ளது.

File:Pataleshwar caves pune.JPG

File:Pataleshwar cave complex Pune.jpg File:Passage Pataleshwar Pune.JPG

இது முழுவதும் கற்களை கொண்டே அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சம் ஆகும். இக்குகைக்கோயிலில் பெரிய மணியும் அமைந்துள்ளது.



மக்கள் நெருக்கடி மிகுந்த புனே நகர தெருக்கள்

File:Pune India.jpg

புனே பல்கலைகழகம்

File:Pune university small.jpg

மும்பை - புனே அதிவேகசாலை

File:MumbaiPuneExpressway.jpg

நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!!!


தொடரும்..................................

No comments:

Post a Comment