ஹெல்சிங்கி
ஹெல்சிங்கி, பின்லாந்து நாட்டின் தலைநகர். கிபி 1550 ஆண்டு இந்த நகரம் கண்டறியப்பட்டது,
ஹெல்சிங்கி நகரத்தின் தற்போதைய மக்கள் தொகை சுமார் ஆறு லட்சத்தை தொட்டுள்ளது .
ஹெல்சிங்கி நகரத்தின் சில காட்சிகள் |
ஹெல்சிங்கி நகர மார்க்கெட் வீதிகள் |
பின்னிஷ் மற்றும் ஸ்வீடிஷ் மொழிகள் வழக்கு மொழிகள். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 85% பேர் பின்னிஷ் மொழியை பேசுகின்றனர், 6 % பேர் ஸ்வீடிஷ் மொழியையும் மீதமுள்ள மக்கள் வட்டார மொழியை பேசுகின்றனர். ஹெல்சிங்கி நகர கட்டிடகலை ஐரோப்பிய கட்டிடக்கலைக்கு மேலும் மெருகேற்றுகிறது.
ஹெல்சிங்கி நகர மையம் |
ஹெல்சிங்கி நகர அருங்காட்சியகம் |
ஹெல்சிங்கி மெட்ரோ ரயில்
ஹெல்சிங்கி நகரம் பின்லாந்து நாட்டின் தலைநகரம் மட்டுமல்லாமல் அந்நாட்டின் பொருளாதாரம், அரசியல், கல்வி மற்றும் கலாச்சார மையமாக திகழ்கிறது.
பின்லாந்து நாட்டின் நுழைவுவாயிலாக ஹெல்சிங்கி உள்ளது. பின்லாந்து நகரம் பல நாட்டு மக்களும் ஒருங்கிணைந்து வாழும் நகராக அறியப்பட்டுள்ளது, குறிப்பாக ரஷ்ய, எஸ்டோனிய, ஸ்வீடிஷ், சோமாலியா, செர்பிய, சீனா நாட்டு மக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர்.
|
No comments:
Post a Comment